புத்தகங்கள் நம் வாழ்வில் ஒரு முக்கிய பகுதியாக விளங்குகின்றன. அவை ஒரு இனத்தின், சமுதாயத்தின் பாரம்பரிய அம்சங்களை பிரதிபலிக்கின்றன. நம்மில் பலர் புத்தகங்கள் வழியாக பெற்ற அனுபவங்களை பிறருடன் பகிர்ந்து கொள்ள விரும்பாதவர்களாக இன்னும் பூட்டி வைத்துக் கொண்டிருக்கிறோம். அவ்வாறான புத்தகங்கள் பகிரப்படும் பொழுது மற்றவர்களின் வாழ்க்கையை வளப்படுத்தவும் மேம்படுத்தவும் துணை புரிகின்றன. இவ்வாறு தான் பயன்பெற்ற புத்தகங்களை பிறர் அறிய செய்வதற்காக எமது சிறிய சேவையில் இணையுங்கள்.
எமது செழுந்தமிழ் நற்பணி மன்றத்தின் நடமாடும் நூலக சேவை எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ள எத்தனித்துள்ளோம். இச்சேவையில் எமக்கு உதவி புரிய என்னும் நல்லுள்ளங்கள் தங்களால் முடிந்த புத்தகங்களை நன்கொடையாக தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தங்களால் நன்கொடையாக வழங்கும் புத்தகங்களை ஜூன் 14 ஆம் திகதி எமது அகரமுதலி தமிழ் அவையத்தின் விருது வழங்கும் விழாவின் போதும் அல்லது நாடளாவிய ரீதியில் எமது நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர்களிடமும் அல்லது தன்னார்வலர்களிடமும் கையளிக்க முடியும்.
குறிப்பு - புத்தகங்கள் வழங்கும் போது புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் தகவல்கள் அனைவராலும் வாசித்து பயன்பெறும் வகையில் அமைவது வரவேற்கத்தக்கது.
No comments:
Post a Comment